×

பணியில் உள்ள ஊழியர்களுக்கு கூடுதலாக 1 மாத அகவிலைப்படி உயர்வு? முத்தரப்பு பேச்சுவார்த்தையில் அதிகாரிகள் உறுதி

சென்னை: பணியில் உள்ள ஊழியர்களுக்கு கூடுதலாக மேலும் ஒரு மாத அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என முத்தரப்பு பேச்சுவார்த்தையில் போக்குவரத்து துறை அதிகாரிகள் உறுதியளித்தனர். சென்னை தேனாம்பேட்டையில் தொழிலாளர் துறை தனி இணை ஆணையர் ரமேஷ் முன்னிலையில் 7ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கிஸ், விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் மோகன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். தொழிற்சங்கத்தினர் தரப்பில் சவுந்தரராஜன், ஆறுமுகநயினார், கமலகண்ணன், தாடி ராசு உள்ளிட்டோர் பங்கேற்றனர். 2 மணிநேரம் நீட்டித்த பேச்சுவார்த்தையில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை தொடர்பாக தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இதன் பின்னர், நிருபர்களிடம் சிஐடியு மாநிலத் தலைவர் சவுந்தரராஜன் கூறுகையில், ‘‘பணியில் உள்ள ஊழியர்களுக்கு ஒரு மாத அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த ஒரு மாத அகவிலைப்படி உயர்வு என்பது ஓய்வு பெற்றவர்களுக்கும் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். மற்ற கோரிக்கைகள் அரசின் பரிசீலனையில் இருப்பதாக தெரிவித்தனர்’’ என்றார்.

The post பணியில் உள்ள ஊழியர்களுக்கு கூடுதலாக 1 மாத அகவிலைப்படி உயர்வு? முத்தரப்பு பேச்சுவார்த்தையில் அதிகாரிகள் உறுதி appeared first on Dinakaran.

Tags : Chennai ,Special Deputy Commissioner ,Ramesh ,Denampetta, Chennai ,Dinakaran ,
× RELATED போலி மருத்துவ சான்றிதழ் தந்து பரோல்...